Weight Loss In Tamil: இன்றைய நாளில் பெரும்பலான மக்கள் உடல் பருமன் பிரச்சனையால் அவதியடைந்து வருகிறார்கள். சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உடல் பருமனால் பாதிக்கப்படுகிறார்கள். இதற்கு ஆரோக்கியமற்ற உணவு பழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் முக்கிய காரணமாக உள்ளன. உடல் பருமன் பல்வேறு உடல்நல அபாயங்களோடு தொடர்புடையது. இது விரைவில் சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் மற்றும் இதய நோய் பாதிப்பு போன்ற உயிருக்கு ஆபத்தான பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். ஆதலால், உடல் பருமனான மக்கள், உடல் எடையை குறைக்க பல்வேறு முயற்சிகளை செய்துவருகிறார்கள்.
ஆனால், உடல் எடையை குறைப்பது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. பல ஆண்டுகளாக உடல் எடையை குறைப்பதில் கிரீன் டீ பிரபலமாக அறியப்படுகிறது. அந்த வகையில், கிரீன் டீயோடு, எந்த பொருளை சேர்த்து அருந்துவது உங்களுக்கு சிறந்த பலனை தரும் என்று இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள். சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் உட்கார்ந்த வாழ்க்கை முறை உங்கள் உடல் எடையை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே, அந்த வாழ்க்கை முறையை கைவிட்டு, உடல் ரீதியாக எப்போதும் சுறுசுறுப்பாக இருக்க முயற்சி செய்ய வேண்டும். ஏனெனில், அவை உங்களை புத்துணர்ச்சியோடு வைத்திருப்பதோடு, உங்கள் வயிற்றை சுற்றி இருக்கும் கூடுதல் எடையைக் குறைக்க உதவும்.
உடல் எடையை குறைப்பதில் உங்கள் உணவும், நீங்கள் எடுத்துக்கொள்ளும் பானங்களும் முக்கிய பங்கை வகிக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா ? ஆம், உடல் எடையை குறைப்பதில் மிகவும் பிரபலமாக அறியப்படும் கிரீன் டீயை உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்கள் அனைவரும் அருந்துகிறார்கள். கிரீன் டீயில் தேனை சேர்த்து அருந்துவது, உங்களுக்கு சிறந்த பலனை கொடுக்கும் என்று கூறப்படுகிறது.
கிரீன் டீயில் உள்ள ரகசிய பொருட்கள் உடல் எடையை குறைப்பதில் கிரீன் டீ பிரபலமான பானமாக கருதப்படுகிறது. உடல் எடையைக் குறைக்க மற்ற தேயிலைகளை விட கிரீன் டீ ஏன் பிரபலமாக அறியப்படுகிறது என்பதற்கான காரணம் என்ன என்று யோசிக்கிறீர்களா? அதற்கான பதில், அதிலுள்ள மூலப்பொருளான கேடசின்கள்தான். இது ஒரு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாகும். எபிகல்லோகேடசின் கேலேட் (EGCG) என்ற நன்கு அறியப்பட்ட வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் கேடசின் கிரீன் டீயில் அதிகமுள்ளது. இது எடை இழப்புக்கு பெரிதும் உதவுகிறது. மற்றொரு முக்கியமான மூலப்பொருளான காஃபின், அனைவருக்கும் பிடித்தமானது. இது உங்கள் வழக்கமான கப் காபியில் இருப்பதை விட குறைவான அளவிலேயே காணப்படுகிறது. ஆனால், உடலிலுள்ள கொழுப்பை எரிக்கவும் உடற்பயிற்சி செயல்திறனை மேம்படுத்தவும் இது நன்றாக வேலை செய்கிறது.