Home Health& Fitness கொலஸ்ட்ரால், சர்க்கரை நோய், இதய நோய்: 3ம் கட்டுப்படுத்த  இந்த நட்ஸ்.

கொலஸ்ட்ரால், சர்க்கரை நோய், இதய நோய்: 3ம் கட்டுப்படுத்த  இந்த நட்ஸ்.

0

பேக்கான் நட்ஸ் வகையை சேர்ந்தது. இது சிறிது இனிக்கும். இந்நிலையில் இதில் ஆரோக்கியமான கொழுப்பு சத்து, நார்சத்து உள்ளது. மேலும் இதில் மெக்னீஷியம், காப்பர் உள்ளது.

இதில் ஆண்டி ஆக்ஸிடண்ட் உள்ளது. இது இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும். வீக்கத்தை குறைக்கும். மூளையின் செயல்பாடுகளுக்கு உதவும்.

100 கிராம் பேக்கானில் எவ்வளவு சத்து இருக்கிறது என்பதை தெரிந்திகொள்வோம்.

கலோரிகள்: 691, கொழுப்பு சத்து: 72 கிராம், மோனோசாச்சுரேடட் கொழுப்பு சத்து: 41 கிராம், பாலி சாச்சுரேடட் கொழுப்பு சத்து: 21 கிராம், கார்போஹைட்ரேட்- 14 கிராம், நார்சத்து: 9 கிராம், சர்க்கரை : 4 கிராம், புரத சத்து: 9 கிராம், வைட்டமின் சி, தைமின், ரிபோபிளாவின், நைகின், வைட்டமின் பி6, போலேட், கால்சியம், இரும்பு சத்து, பாஸ்பரஸ்,  பொட்டாஷியம், சிங்க் உள்ளது.

இந்நிலையில் இதில் மோனோசாச்சுரேடட் கொழுப்பு சத்து உள்ளதால் எல்.டி.எல் கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்க விடாது. மேலும் இதய நோய் வராமல் தடுக்கும்.

இந்நிலையில் இதில் உள்ள நார்சத்து மற்றும் கொழுப்பு சத்து ஆரோக்கியமான முறையில் உடல் எடை குறைக்க உதவும். இது அதிக நேரம் அதிகம் சாப்பிட்டது போல உணர்வை ஏற்படுத்தும்.

இதில் உள்ள வைட்டமின் இ மற்றும் ஆண்டி ஆக்ஸிடண்ட்  செல்களை பாதிப்பிலிருந்து பாதுகாக்கும். மேலும் இதில் குறைந்த கிளைசிமிக் இண்டக்ஸ் உள்ளதால், சர்க்கரை நோயாளிகள் இதை சாப்பிடலாம். குறிப்பாக 28 கிராம் வரை பேக்கானை எடுத்துக்கொள்ளலாம்.

இந்நிலையில் வயதாவதால், சிந்தனை குறைபாடு ஏற்படும். இந்நிலையில் பேக்கான் இதை தடுக்கும்.  

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version