வாழைமரம் என்றால் அதன் இலை முதல் வேர் வரை மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன.
மனிதன் உயிர் வாழ வாழைமரத்தின் பங்கு இன்றியமையாதது. அதேபோல், மிகவும் மலிவாக கிடைக்கும் வாழைக்காயின் அற்புத பயன்கள் நிறைந்துள்ளன.
வாழைக்காயை வேக வைத்து வறுத்து சாப்பிட்டால் அதன் சுவையோ தனிதான். வாழைக்காயில் அதிக நார்ச்சத்து காணப்படுகிறது. இவை செரிமானத்திற்கு சிறந்தது, மேலும் நீரிழிவு நோயாளிகளுக்கு அற்புத உணவு.
1. வாழைக்காயில் சேர்மங்கள் அதிகமாக இருப்பதாலும், இதில் உள்ள பைட்டோ கெமிக்கல்கள் வயிறு மற்றும் சிறுகுடல்களை சுத்தம் செய்து செரிமானத்தை சீராக்குகிறது.
2. வாழைக்காயில் உள்ள பொட்டாசியம் தசைகள் சுருங்குவதை தடுக்கிறது. மேலும், இதய நாளத்தையும் பராமரிக்கிறது.
3. பச்சை வாழைக்காயில் உள்ள பெக்டின் மற்றும் மாவுச்சத்து இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. மேலும், ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்து போராட உதவி செய்கிறது.
4. வாழைக்காயில் கிளைசெமிக் உள்ளதால் இது ஆன்டிஆக்ஸிடன்ட்களின் களஞ்சியமாக திகழ்கிறது. ஆக்ஸிஜனேற்ற சேதத்தை தடுக்கிறது.
5. வாழைக்காயில் உள்ள வைட்டமின் சி, பீட்டா கரோட்டின் மற்றும் லுடீன் மற்றும் ஜியாக்சாந்தின் போன்ற பிற பைட்டோநியூட்ரியன்களை வழங்குகிறது. மேலும், வீக்கத்தைக் குறைக்க உதவி செய்கிறது.
6. வாழைக்காயில் காணப்படும் நார்ச்சத்து உடல் எடை குறைக்க உதவி செய்கிறது.