அசுர வளர்ச்சியும் அற்புத யோகமும் அக்டோபர் மாதத்தில் சில ராசிக்காரர்களுக்கு கிடைக்கப்போகிறது. பாம்பு கிரகங்களான ராகு கேது திருக்கணிதப்பஞ்சாங்கப்படி ஐப்பசி மாதம் 13ஆம் தேதி அக்டோபர் 30,2023 நாள் மீனம் ராசிக்கும், கன்னி ராசிக்கும் இடப்பெயர்ச்சி அடைகின்றன. இந்த கிரகங்களின் இடப் பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அதிரடி மாற்றம் ஏற்படப்போகிறது. கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு ராகு கேது பெயர்ச்சியால் என்னென்ன மாற்றங்கள் ஏற்படப்போகிறது என்று பார்க்கலாம்.
ராகுவைப் போல கொடுப்பாரும் இல்லை கேதுவைப் போல கெடுப்பாரும் இல்லை என்பார்கள். யோகாதிபதி ராகுவும், மோட்சகாரகன் கேதுவும் நிழல் கிரகங்கள். ராகுபகவான் அள்ளிக்கொடுப்பார். கேது பகவான் கெடுக்க நினைப்பவர்களை கெடுப்பார். ராகு ஆசைக்கு காரகர், கேது மோட்சத்திற்கு காரகர் இவர்களுக்கு ராசி மண்டலத்தில் சொந்த ஆட்சி வீடு கிடையாது இவர்கள் யாருடைய வீட்டில் இருக்கின்றனரோ யாருடைய சாரத்தில் இருக்கிறார்களோ அதனுடைய பலனை செய்வார்கள்.
நவக்கிரகங்களில் புதனை விட செவ்வாயும், செவ்வாயை விட சனியும், சனியை விட குருவும், குருவை விட சுக்கிரனும், சுக்கிரனை விட சந்திரனும் சந்திரனை விட சூரியனும் சூரியனை விட ராகுவும் ராகுவை விட கேதுவும்,பலம் பெற்றவர்கள். ஜனன ஜாதகத்தில் ராகு கேது 3, 6, 11 ஆகிய இடங்களில் நல்ல பலனை தரக்கூடியவை. ராகு கேதுவுக்கு 3, 7, 11, பார்வைகள் விசேசமானது. புதனை போல கேதுவும் குருவை போல ராகுவும் செயல்பட உள்ளதால் சிம்மம் ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
கன்னி ராசிக்காரர்களே..இதுநாள் வரைக்கும் உங்கள் ராசிக்கு இரண்டாம் இடத்தில் இருக்கும் கேதுவும் 8ஆம் இடத்தில் ராகுவும் இருந்த நிலைமாறி ராசியில் கேதுவும் 7 ஆம் இடத்தில் ராகுவும் அமரப்போகின்றனர். ஏற்கனவே இருந்த இடம் நல்ல இடம் தான். உங்களால் எல்லோருக்கும் நல்லது நடக்கும். ஆனால் உங்களுக்கு எந்த பயனும் இல்லை. வேலையில்லாமல் தவித்துக் கொண்டிருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். பணம் விசயங்களில் கவனம் தேவை. நம்முடைய உறவினர்தானே, நமக்கு ரொம்ப வேண்டியவர்தானே என்று மற்றவர்களுக்காக ஜாமீன், கேரண்டி படிவங்களில் கையெழுத்து போட வேண்டாம். கடன் வாங்கி கொடுக்க வேண்டாம். கொடுத்த பணம் திரும்ப வராமல் போய்விடும். தாழ்வுமனப்பான்மை, குழப்பங்களிலிருந்து விடுபடுவீர்கள். பாதியிலேயே நின்றுபோன பல வேலைகளை இனி முழு மூச்சுடன் முடிப்பீர்கள். அரசாங்கக் காரியங்களில் இருந்து வந்த தடுமாற்றங்கள் விலகும். பிள்ளைகளின் வருங்காலத்தை மனதில் கொண்டு முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வெளிவட்டாரத்தில் உங்களுக்கு மதிப்பு மரியாதை கூடும். ஊருக்கு ராஜாவாக இருந்தாலும் குடும்ப வாழ்க்கை கொஞ்சம் கசக்கதான் செய்யும். பிள்ளைகள், உயர்கல்வியில் அதிக மதிப்பெண் எடுத்து வெற்றி பெறுவார்கள். குலதெய்வத்துக்குச் செய்ய வேண்டிய நேர்த்திக்கடனை சிறப்பாக முடிப்பீர்கள்.
கன்னி ராசிக்காரர்களே.. உங்களுடைய ராசியில் கேது பகவான் அமர்வதால் கௌரவம் புகழ் கீர்த்தி அந்தஸ்து அதிகரிக்கும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும் உத்தியோகத்தில் முன்னேற்றம் வரும். வருமானம் திருப்தி தரும். கடந்த காலங்களில் பொருளாதார நெருக்கடியில் மூழ்கி உழைப்பு சம்பாத்தியம் அனைத்தையும் அசலுக்கு மேல் வட்டி கட்டி சோற்றுக்கே கடனை வாங்கி நொந்து போனவர்களுக்கு புதிய நட்பு கூட்டு தொழில் ஏதாவது உதவி கிடைத்து தலை நிமிரலாம். உடல் நலத்தில் அக்கறையும் கவனமும் தேவை. வெளி உணவுகளைத் தவிர்த்து விடுங்கள் சில நேரங்களில் வருமானம் அதிகரித்தாலும் சேமிக்க முடியாமல் திணறுவீர்கள். திடீர்ப் பயணங்கள் அடிக்கடி நிகழும். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். ஜென்ம சனியால் இது வரை போராட்டம் ஏமாற்றம் சஞ்சலம் என்று வாழ்க்கை வாழ்ந்தவர்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சியால் நல்ல செய்திகள் தேடி வரும் பொருளாதார நெருக்கடி தீரும். அக்டோபர் மாதத்திற்குப் பிறகு உங்களின் பொருளாதாரம் நிதி நிலைமையில் அசுர வளர்ச்சி ஏற்படப்போகிறது அனுபவிக்கத் தயாராகுங்கள்.