Home Srilanka ரணில் – மஹிந்த இரகசிய சந்திப்பு! – கொழும்பு அரசியலில் பரபரப்பு.

ரணில் – மஹிந்த இரகசிய சந்திப்பு! – கொழும்பு அரசியலில் பரபரப்பு.

0

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் மொட்டுக் கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் அண்மையில் இரகசியமாகச் சந்தித்து உரையாடியுள்ளனர்.

கொழும்பு – சங்கிரில்லா ஹோட்டலில் அந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

மஹிந்தவின் இளைய மகன் அந்தச் சந்திப்பை ஏற்பாடு செய்தார் என்று கூறப்படுகின்றது.

ஆனால், மஹிந்தவின் மூத்த மகன் நாமல் இதற்கு எதிர்ப்பு என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த நாடாளுமன்ற அமர்வின்போது மொட்டுக் கட்சி எம்.பிக்கள் சிலர் சபைக்குள் உரையாடிக் கொண்டிருந்தனர். அப்போது ராஜபக்ச குடும்பத்துக்கு மிகவும் நெருக்கமான எம்.பி. ஒருவரே ரணிலும் மஹிந்தவும் இரகசியமாகச் சந்தித்து உரையாடிய தகவலை அம்பலப்படுத்தியுள்ளார் என்று தெற்கு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version