நாட்டை விட்டு வெளியேறிய 120 விசேட வைத்திய நிபுணர்கள் கறுப்புப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளனர்.
வெளிநாடுகளுக்குச் சென்று பணிக்குத் திரும்பாத வைத்திய நிபுணர்களே இந்த பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளனர். 2022ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் திகதி முதல் இந்த வருடத்தின் ஒகஸ்ட் 18ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 363 வைத்தியர்கள் வெளிநாட்டுப் பயிற்சிக்காகச் சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அவர்களில், 120 மருத்துவர்கள் மீண்டும் நாடு திரும்பவில்லை என குறிப்பிடப்படுகின்றது. .
கறுப்புப் பட்டியலில் உள்ள மருத்துவர்கள் நாடு திரும்ப முடியும் என்ற போதிலும் அவர்கள் சேவையில் ஈடுபடுவதானால், பொதுச் சேவை ஆணைக்குழுவிடம் மேன்முறையீடு செய்ய வேண்டும் என்று சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.