Home Srilanka ரணிலுக்கு ஆதரவாக 40 எம்.பிக்களை வளைத்துப் போட திட்டம்.

ரணிலுக்கு ஆதரவாக 40 எம்.பிக்களை வளைத்துப் போட திட்டம்.

0

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தான் வெற்றிபெறுவதற்காக மொட்டுக் கட்சியின் ஆதரவைத் திரட்டுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அயராது பாடுபடுகின்றார் என அறியமுடிகின்றது.

தனக்கான ஆதரவு மொட்டுக் கட்சி ரீதியாகக் கிடைக்காது என்று தெரிந்துவிட்டதால் மொட்டுக் கட்சியில் உள்ள பலரை வளைத்துப் போடுவதற்கு ரணில் நடவடிக்கை எடுத்து வருகின்றார் எனவும் தெரியவருகின்றது.

அதற்கமைய மொட்டுக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் நிமால் லன்சா தலைமையில் ரணிலுக்கு ஆதரவு திரட்டும் கூட்டமைப்பு உருவாக்கப்படவுள்ளது.

அந்தக் கூட்டமைப்பில் முக்கியமாக மொட்டு எம்.பிக்கள் 40 பேரை இணைப்பதற்கு நிமால் லன்சா உறுதிபூண்டுள்ளார் எனவும் அறியமுடிகின்றது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version