Home Uncategorized வவுனியா சிறைச்சாலையில் சிற்றம்மை தடுப்பூசி ஏற்றல்

வவுனியா சிறைச்சாலையில் சிற்றம்மை தடுப்பூசி ஏற்றல்

0

வவுனியா சிறைச்சாலையில் சிற்றம்மை தடுப்பூசி பெறாத அனைத்து கைதிகளுக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தொற்றுநோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

சிறைச்சாலைக்குள் சிற்றம்மை நோய் பரவுவதைக் கட்டுப்படுத்த தேவையான அனைத்து அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளதாக அந்த பிரிவு தெரிவித்துள்ளது.

வவுனியா சிறைச்சாலையில் நான்கு கைதிகளுக்கு சிற்றம்மை நோய் இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து கடந்த ஜூலை 25 ஆம் திகதி முதல் சிறைச்சாலை தற்காலிகமாக மூடப்பட்டது.

கைதிகள் உறவினர்களை சந்திப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களை சந்திக்கும் வாய்ப்புகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலைகள் பேச்சாளர் சந்தன ஏகநாயக்க தெரிவித்துள்ளார்.

அதேவேளை, கைதிகளை சட்ட நடவடிக்கைகளுக்காக நீதிமன்றங்களுக்கு அழைத்துச் செல்வதும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வவுனியா சிறைச்சாலையில் கைதிகளின் எண்ணிக்கை 400ஐ தாண்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version