திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பிரதேசத்தில் அமைக்கப்பட்டிருந்த தொலைதொடர்பு கோபுரம் சரிந்து விழுந்ததில் ஐவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பலத்த காற்றின் காரணமாக கந்தளாயில் நிர்மானிக்கப்பட்டிருந்த எஸ்.எல்.டி மொபிடல் நிறுவனத்துக்கு சொந்தமான தொலைதொடர்பு கோபுரம் இன்று(04.07.2023) முற்பகல் இவ்வாறு சரிந்து விழுந்துள்ளது.
இதன்போது அருகில் இருந்த தபால் கட்டடத்தின் மேல் சரிந்து விழுந்ததால் கடமையில் ஈடுபட்டிருந்த ஐவர் படுகாயமடைந்துள்ளனர் எனக் கூறப்படுகிறது.
இவ்வாறு காயமடைந்தவர்கள், கந்தளாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.