கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்றையதினம் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இன்றையதினம் தங்க அவுண்ஸ் ஒன்றின் விலையானது 593,255 ரூபாவாக பதிவாகியுள்ளது.
24 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 167,450 ரூபாவாகவும், 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 20,930 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அதேசமயம், 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 153,500 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 19,190 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
மேலும், 21 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 146,550 ரூபாவாகவும், 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 18,320 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
இதேவேளை, ஆபரணத் தங்கத்தின் விலையானது இந்த விலைகளில் இருந்து மாற்றம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.