Home Srilanka 10கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியானதங்க ஜெல்லை அந்தரங்கத்தில் பதுக்கிய இளம் பெண் கைது…!

10கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியானதங்க ஜெல்லை அந்தரங்கத்தில் பதுக்கிய இளம் பெண் கைது…!

0

இளம் பெண்ணொருவர் பத்து கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான தங்க ஜெல் கரைசல் அடங்கிய 04 பொதிகளை, தனது அந்தரங்கப் பகுதியில் மறைத்து வைத்து, கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியேற முயன்ற போது கைது செய்யப்பட்டுள்ளார்.

விமான நிலையத்தில் தீர்வையற்ற கடைத்தொகுதியில் (அழகுசாதான பொருட்கள் விற்பனை நிலையம்) கடமையாற்றும் 24 வயதான பெண்ணொருவரே இவ்வாறு, இன்று செவ்வாய்க்கிழமை (04) காலை கைது செய்யப்பட்டார்.

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து 05 கிலோ கிராமுக்கும் அதிகமான தங்க ஜெல் அடங்கிய 04 பொதிகளை தனது அந்தரங்கப் பகுதியில் மறைத்து வைத்துக்கொண்டு காலை 8.45 மணியளவில் வெளியேற முயன்ற போதே இந்த பெண் கைது செய்யப்பட்டார்.

இந்த பெண்ணும் கைப்பற்றப்பட்ட தங்க ஜெல் அடங்கிய பொதிகளும் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version