Home Health& Fitness கரும்பின் மருத்துவ குணங்கள்.

கரும்பின் மருத்துவ குணங்கள்.

0

கரும்பு குளிர்ச்சித்தன்மை உடையது. கரும்பு கிடைக்கும் சீசனில் தேவையானதை உண்டுவர, குடல் புண், மூலம், வெட்டை சூடு இவைகளை குணப்படுத்தும். பித்தத்தை நீக்கும், புண்களை ஆற்றும்.

மேலும், கிருமி நாசினியாகவும், மலமிளக்கியாகவும் செயல்படும். கரும்பிற்கு ஜீரண சக்தியை தூண்டும் தன்மையுள்ளது.
பயன்படுத்தும் முறை

*கரும்புச் சாறுடன், இஞ்சிச்சாறு கலந்து அருந்த வலிப்பு குணமாகும்.

*கரும்புச் சாறு உடல் சூட்டை குறைக்கும்.

*ஒரு கப் கரும்புச் சாறுடன் சிறிதளவு வெல்லம், ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து சாப்பிட உடல் குளிர்ச்சி பெறும்.

*கரும்பு சர்க்கரையும் சிலவகை மருத்துவ குணங்களை கொண்டதாகும். சர்க்கரை கலந்த நீரால் புண்களை கழுவி வர புண்கள் ஆறும்.

*கரும்புச் சாறுடன் இஞ்சிச் சாறு, எலுமிச்சைச் சாறு கலந்து அருந்தி வர பித்தம் குறையும், உள் சூடு, குடல் புண், மூலம் போன்றவை குணமாகும்.

*கரும்புச் சாறுடன் சிறிதளவு தேன், எலுமிச்சைச் சாறு கலந்து அருந்தி வர, மலச்சிக்கல் தீரும்.

*கரும்பு கற்கண்டு தாதுவலிமையை கூட்டும்.

*கரும்புச்சாறு பித்தவாந்தி மற்றும் ருசியின்மையை குறைக்கும்.

*பாலில் கரும்பு, கற்கண்டு, முருங்கைப்பூ சேர்த்து காய்ச்சி, தினசரி இரவு ஒரு கப் அருந்தி வர தாது புஷ்டி ஏற்படும்.

*திடீர் விக்கலுக்கு சர்க்கரை சிறிதளவு சாப்பிட்டால் விக்கல் நிற்கும்.

*நீண்ட நேரம் பேருந்தில் அல்லது வேறுவிதத்தில் பயணம் செய்ததால் ஏற்பட்ட உடற்சூட்டுக்கு கரும்புச்சாறு அருந்த சூடு தணியும். நீரில் கரும்புவேரை இட்டு காய்ச்சி அரை கப் வீதம் இருமுறை குடிக்க சிறுநீர்க் கடுப்பு தீரும்.

*சர்க்கரை கலந்த நீரால் கண்களை கழுவ புகையால் பாதிப்பான கண்கள் நலம்பெறும்.

*வாரத்தில் இரு நாட்கள் கரும்புச்சாறு பருகலாம். தினசரி பருகக் கூடாது. அப்படி தொடர்ந்து பருகினால் வெட்டை சூடு, ஜலதோஷம், நீரிழிவு நோய் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version