Home Health& Fitness நீரிழிவு நோயாளிகள் நுங்கு சாப்பிடலாமா?

நீரிழிவு நோயாளிகள் நுங்கு சாப்பிடலாமா?

0

நீரிழிவு நோயாளிகள் உணவு விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். 100 கிராம் நுங்கில் 43 கலோரிகள் தான் இருக்கிறது.

நீரிழிவு நோயாளிகள் உணவு விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். என்ன சாப்பிட வேண்டும், எதை சாப்பிடக்கூடாது என்பதில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். நாம் சாப்பிடக்கூடிய உணவுகள் உடலில் இரத்த சர்க்கரையை அதிகரிக்கக்கூடும்.

குறிப்பாக, பழங்கள் சாப்பிடுவதில் கவனமாக இருக்க வேண்டும். பழங்கள் நார்ச்சத்து, சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட் இருக்கிறது. சில பழங்களில் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும். இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்காத பழங்களை தேர்ந்தெடுத்து சாப்பிடலாம். நுங்கு மிகவும் சுவையாக இருப்பது மட்டுமின்றி, இதில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளன. வெயில் காலத்தில் நீரிழிவு நோயாளிகளுக்கு நுங்கு ஒரு சிறந்த பழமாக திகழ்கிறது.

நுங்கில் அதிக அளவு வைட்டமின் சி, ஈ, எ, பி1, பி2, பி7 இருக்கிறது. நுங்கில் கார்போஹைட்ரேட் அளவு குறைவாக இருப்பதாலும், சர்க்கரை உயர்தல் குறியீடு 35 என்ற மிகக் குறைந்த அளவு இருப்பதாலும், நீரிழிவு நோயாளிகள் நுங்கை பயமின்றி உண்ணலாம்.

100 கிராம் நுங்கில் 43 கலோரிகள் தான் இருக்கிறது. இதில் உள்ள சோடியம் மற்றும் பொட்டாசியம், நீர்ச்சத்து சமநிலைக்கு பெரிதும் உதவி புரிகிறது.

நுங்கில் நீர்ச்சத்து அதிகமாக இருப்பதால் இதை உட்கொள்ளும்போது வயிறு கனத்துப் போவதால் பசி குறைந்து, மற்ற கார்போஹைட்ரேட் உணவுகள் அதிகம் சாப்பிடாமல் தடுக்கப்படுகிறது. முற்றிய நுங்கை சாப்பிடுவதால் வயிற்று வலி ஏற்படலாம். அதனால் முற்றிய நுங்கை சாப்பிடுவதை நீரிழிவு நோயாளிகள் தவிர்க்கலாம்.

இதனை நீரிழிவு நோயாளிகளும் அச்சம் இன்றி அளவாக எடுத்து கொள்ளலாம். மேலும் நுங்கு சாப்பிடுவதால் மலச்சிக்கல், வயிற்றுப்புண், வேர்க்குரு போன்ற பிரச்சினைகளும் குறைய வாய்ப்புள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version