Home astrology ராகு கேது பெயர்ச்சி 2023: யாருடைய வாழ்க்கையில் மாற்றம், முன்னேற்றம் வரும்..புரமோசன் யாருக்கு

ராகு கேது பெயர்ச்சி 2023: யாருடைய வாழ்க்கையில் மாற்றம், முன்னேற்றம் வரும்..புரமோசன் யாருக்கு

0

பாம்பு கிரகங்களான ராகு கேது திருக்கணிதப்பஞ்சாங்கப்படி ஐப்பசி மாதம் 13ஆம் தேதி அக்டோபர் 30,2023 நாள் மீனம் ராசிக்கும், கன்னி ராசிக்கும் இடப்பெயர்ச்சி அடைகின்றன. இந்த கிரகங்களின் இடப் பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மாற்றமும் முன்னேற்றமும் ஏற்படும். சிலருக்கு வேலையில் இடமாற்றம் ஏற்படும். கடகம் ராசிக்காரர்களுக்கு ராகு கேது பெயர்ச்சியால் என்னென்ன மாற்றங்கள் ஏற்படப்போகிறது என்று பார்க்கலாம்.

ராகுவும் கேதுவும் ஓவ்வொரு ராசியிலும் ஒன்றரை ஆண்டுகள் அதாவது 18 மாதங்கள் தங்கி சுப அசுப பலன்களைத் தருவார்கள். வாக்கிய பஞ்சாங்கப்படி ராகு பகவான் மேஷ ராசியில் இருந்து மீன ராசிக்கும் கேது பகவான் துலாம் ராசியில் இருந்து கன்னி ராசிக்கும் இடப்பெயர்ச்சி அடையப்போகின்றனர்.

நவக்கிரகங்களில் புதனை விட செவ்வாயும், செவ்வாயை விட சனியும், சனியை விட குருவும், குருவை விட சுக்கிரனும், சுக்கிரனை விட சந்திரனும் சந்திரனை விட சூரியனும் சூரியனை விட ராகுவும் ராகுவை விட கேதுவும்,பலம் பெற்றவர்கள். ஜனன ஜாதகத்தில் ராகு கேது 3, 6, 11 ஆகிய இடங்களில் நல்ல பலனை தரக்கூடியவை. ராகு கேதுவுக்கு 3, 7, 11, பார்வைகள் விசேஷமானது. ஜாதகத்தில் ராகு- கேது மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, மகரம், ஆகிய வீடுகளில் இருந்தால் வலுவான யோகம் உண்டு என்று நூல்களில் சொல்லப்பட்டுள்ளது.

ராகுவைப் போல கொடுப்பாரும் இல்லை கேதுவைப் போல கெடுப்பாரும் இல்லை என்பார்கள். யோகாதிபதி ராகுவும், மோட்சகாரகன் கேதுவும் நிழல் கிரகங்கள். ராகுபகவான் அள்ளிக்கொடுப்பார். கேது பகவான் கெடுக்க நினைப்பவர்களை கெடுப்பார். அக்டோபர் மாதத்திற்கு பிறகு ராகு குரு பகவானைப் போலவும், கேது புதன் பகவானைப்போலவும் செயல்படுவார்கள். கடக ராசிக்காரர்களே உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டிற்கு ராகுவும் மூன்றாம் வீட்டிற்கு கேதுவும் இடப்பெயர்ச்சி அடைவது யோகம்தான். ராகு கேதுவுக்கு 3, 6, 11,ஆகிய வீடுகள் நல்ல அம்சம்தான். இதுநாள் வரை தடைபட்டு வந்த காரியங்கள் மளமளவென முடியும். திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளினால் வீடு களைகட்டும். பாக்கிய ஸ்தானத்திற்கு மாறும் ராகுவினால் வேலையில் ஏற்பட்டு வந்த படபடப்பு குறையும். தள்ளிப்போன பதவி உயர்வும் ஊதிய உயர்வும் தடையின்றி கிடைக்கும். வேலைச்சுமை குறையும். வேலை செய்யும் இடத்தில் உங்களின் நிர்வாகத்திறனை மேலதிகாரி பாராட்டுவார். சிலருக்கு பெரிய நிறுவனங்களில் தகுதி திறமைக்கேற்ற வேலை கிடைக்கும்.

பாம்பு கிரகங்களின் இடப்பெயர்ச்சி கடக ராசிக்காரர்களுக்கு மிகப்பெரிய யோகத்தை தரப்போகிறது. விஐபிக்களின் நட்பு கிடைக்கும். பெரிய மனிதர்களின் உதவியோடு பல நல்ல காரியங்களை செய்து முடிப்பீர்கள். நீங்கள் கேட்ட இடத்தில் பண உதவிகள் கிடைக்கும். பொன் பொருள் சேர்க்கை அதிகரிக்கும். தடைப்பட்டு வந்த மேற்படிப்பை தொடர்வீர்கள். அம்மா உடன் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் நீங்கும். குடும்பத்துடன் வெளிமாநில புண்ணியத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். குல தெய்வ பிரார்த்தனை கோடி நன்மையை தரும். அதே போல உங்கள் ராசிக்கு மூன்றாம் வீடான தைரியம், வீரியம், முயற்சி ஸ்தானத்தில் கேது அமர்வது நன்மை தரும் அமைப்பாகும். சங்கடங்கள் தீர்ந்து குடும்பத்தில் மகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெறும். குடும்பத்தில் சுபகாரியம் புதுமுயற்சி,திருமணம்,புத்திர பாக்கியம் போன்ற சுபமங்கள நிகழ்ச்சிகள் நடக்கும். நிர்வாக பொறுப்புகள் தேடி வரும். நிண்ட நாட்களாக எதிர்பபார்த்த உதவிகள் வேலை வாய்ப்புகள்,வெளிநாட்டு பயணங்கள் அனுகூலம் ஆதாயத்தை தரும். வருமானம் திருப்தி தரும். செய்யும் தொழிலில் பார்க்கும் வேலைகளில் இதுநாள் வரை இருந்த இடையூறு நீங்கும். மறைமுக எதிர்ப்புகள் விலகும். மொத்தத்தில் இது வரை நீங்கள் நினைத்த காரியம் கை கூடும். மனைவிக்கு தங்க நகைகளை வாங்கிக் கொடுப்பீர்கள். இதுநாள் வரை வாடகை வீட்டில் வசிப்பவர்கள் அக்டோபர் மாதத்திற்குப் பிறகு சொந்த வீட்டிற்கு மாறுவீர்கள். சொந்த வீட்டில் சிறிய வீட்டில் வசிப்பவர்கள் மாடி வீடு கட்டி குடியேறுவீர்கள். பங்காளி பிரச்சினை பூர்வீக சொத்துச் சம்பந்தப்பட்ட பிரச்னைகளைக் கவனமாகக் கையாளுங்கள். இழுபறியாக இருந்த வழக்குகள் சாதகமாக முடியும். இந்த ராகு கேது விடிவையும் விமோசனத்தை தந்து பண வருமானத்தையும் சேமிப்பையும் கொடுக்கப் போகிறார். மேலும் நன்மைகள் நடைபெற விநாயகப்பெருமானுக்கும் அனுமனுக்கும் செவ்வாய்கிழமை வெற்றிலை மாலை சாற்றி வணங்குவது நல்லது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version