Saturday, April 27, 2024
spot_img
Homeசினிமாவருத்தம் தெரிவித்த ஞானவேல்ராஜா..உண்மையை பலி கொடுக்க முடியாது – சசிகுமார் ஆதங்கம்

வருத்தம் தெரிவித்த ஞானவேல்ராஜா..உண்மையை பலி கொடுக்க முடியாது – சசிகுமார் ஆதங்கம்

இயக்குநர் அமீர் குறித்து பேசியது குறித்து வருத்தம் தெரிவிப்பதாக ஞானவேல்ராஜா கடிதம் வெளியிட்டதை குறிப்பிட்டு நடிகர் சசிகுமார் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

திரையுலகில் தற்போது பரபரப்பாக பேசப்படும் விடயம் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மற்றும் இயக்குநர் இடையிலான பிரச்சனை தான்.

அதிலும் குறிப்பாக ஞானவேல் ராஜா அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அமீர் மீது வைத்தார்.

அவருக்கு கண்டனம் தெரிவித்த நடிகர்கள் சமுத்திரகனி, சசிகுமார், கரு.பழனியப்பன் மற்றும் பொன்வண்ணன் ஆகியோர், பொய் குற்றச்சாட்டுகளை ஞானவேல் ராஜா கூறுவதாக கொந்தளித்தனர்.

இந்த நிலையில் இன்று ஞானவேல் ராஜா கடிதம் ஒன்றை வெளியிட்டார்.

அதில், ‘பருத்திவீரன் பிரச்சனை கடந்த 17 ஆண்டுகளாக நடந்து வருகிறது. நான் இதுநாள் வரை அதை பற்றி பேசியதில்லை.

என்றைக்குமே அமீர் அண்ணா என்று தான் நான் குறிப்பிடுவேன். ஆரம்பத்தில் இருந்தே அவர் குடும்பத்தாருடன் நெருங்கிப் பழகியவன்.

அவரது சமீபத்திய பேட்டிகளில் என் மீது அவர் சுமத்திய பொய்யான குற்றச்சாட்டுகள் என்னை மிகவும் காயப்படுத்தியது.

அதற்கு பதில் அளிக்கும்போது நான் பயன்படுத்திய சில வார்த்தைகள் அவர் மனதை புண்படுத்தியிருந்தால் அதற்கு நான் மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.

என்னை வாழ வைக்கும் சினிமா துறையையும், அதில் பணிபுரியும் அனைவரையும் மிகவும் மதிப்பவன் நான். நன்றி!’ என தெரிவித்தார்.

ஆனால் ஞானவேல் ராஜாவின் இந்த கடிதத்திற்கும் கண்டனம் தெரிவித்து சசிகுமார் கேள்விகளை எழுப்பியுள்ளார்.

அவர், “ஞானவேல் ராஜா மீது அமீர் அண்ணா சுமத்திய பொய் குற்றச்சாட்டுக்கள் என்ன? நான் பயன்படுத்திய சில வார்த்தைகள் புண்படுத்தி இருந்தால் என்று குறிப்பிட்டு சொல்கிறார் ஞானவேல் ராஜா.

அப்படி என்றால் அந்த சில வார்த்தைகள் என்ன? திட்டமிட்டு ஒருவரை அவமானப்படுத்திவிட்டு அவருக்கு அவரே வருந்துவது என்ன மாதிரியான வருத்தம்? இதன்மூலம் அமீர் அண்ணனுக்கு ஞானவேல் ராஜா சொல்ல வருவது என்ன? பெயரிடப்படாத அந்த கடிதம் யாருக்கு?” என கேள்விகளை அடுக்கியுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments