Home Srilanka கொக்குவிலைச் சேர்ந்த ரஜரட்ட பல்கலைக்கழக மாணவன் நீரில் மூழ்கிப் பலி!

கொக்குவிலைச் சேர்ந்த ரஜரட்ட பல்கலைக்கழக மாணவன் நீரில் மூழ்கிப் பலி!

0

ரஜரட்ட பல்கலைக்கழக முகாமைத்துவ பீட மாணவர் ஒருவர் நீச்சல் தடாகத்தில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று (27) இடம்பெற்றுள்ளது.மட்டக்களப்பு கொக்குவில் பகுதியைச் சேர்ந்த முருகதாஸ் திலக்க்ஷன் என்ற 21 வயதுடைய மாணவனே உயிரிழந்துள்ளார்.நேற்று மாலை அவருடன் மேலும் ஐந்து மாணவர்கள் நீச்சல் தடாகத்தில் இறங்கும்போதே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். ஏனைய மாணவர்கள் அவரை மீட்டு முதலுதவிகளை வழங்கி பல்கலைக்கழக அம்பியூலன்ஸ் மூலம் மிஹிந்தலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version