இளவாலை வருத்தபடாத வாலிப சங்கம் தனது 10ம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு நடாத்தும் அணிக்கு 9 பேர் உள்ளடக்கிய “வாலிப கிண்ணம்” மாபெரும் உதைபந்தாட்ட போட்டி இன்றைய தினம் இளவாலை புனித கென்றியரசர் கல்லூரி மைதானத்தில் கோலாகலமாக ஆரம்பமாகியது.
இப்போட்டியில் நாவாந்துறை சென் மேரிஸ் அணியை எதிர்த்து அராலி பாரதி அணி மோதியது. ஆரம்பத்தில் இருந்து போட்டியை தனது கட்டுபாட்டில் வைத்திருந்த சென்மேரிஸ் அணியினர் அவ் அணியின் நிதர்சன் , யூட் கோலாட்டம் ஆட ஆட்ட நேர முடிவில் 08:00 என்ற கோலடிப்படையில் நாவாந்துறை சென் மேரிஸ் அணி வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது..
கோல்கள் விபரம்
நிதர்சன்
யூட்
யொனிஸ்ரன்
தங்கன்
நியூராஜ்
இப்போட்டியின் ஆட்ட நாயகனாக நாவாந்துறை சென் மேரிஸ் வீரர் யூட் தெரிவானார்..