Home India கோவில் உண்டியலில் கிடந்தரூபா 100கோடி பெறுமதியான காசோலை …!

கோவில் உண்டியலில் கிடந்தரூபா 100கோடி பெறுமதியான காசோலை …!

0

கோவில் உண்டியலில் பக்தர் ஒருவர் காணிக்கையாக ரூபா 100கோடி பெறுமதியான காசோலையை போட்டிருப்பதை கண்டு ஆலய நிர்வாகத்தினரே ஆச்சிரியம் அடைந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள சிம்மாசலம் அப்பாண்ணா வராஹலக்‌ஷ்மி நரசிம்ம சுவாமி கோயிலிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த கோவிலில் வைக்கப்பட்டுள்ள உண்டியலில் இருந்து 15 நாட்களுக்கு ஒருமுறை காணிக்கை எண்ணப்படுவது வழமையாகும்.

இதேபோன்று நேற்றைய முன் தினமும் (23) கோவில் நிர்வாகத்தினர் காணிக்கையை எண்ணத் தொடங்கினர்.

இதன்போது பக்தர் ஒருவர் காணிக்கையாக ரூபா நூறு கோடி காசோலையை போட்டிருந்தார். அதிலும், ‘வராஹ லக்‌ஷ்மி நரசிம்ம தேவஸ்தானம்’ என்ற பெயரில் எழுதப்பட்ட காசோலையில் முதலில் 10 ரூபாய் என்றும், பின்னர் அதை அழித்து 100கோடி என்றும் எழுதப்பட்டிருப்பது தெரிந்ததும், அனைவருக்கும் சந்தேகம் ஏற்பட்டது. இதுகுறித்து உயரதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டதாம்.

இதனையடுத்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அந்த காசோலையில் எழுதப்பட்டிருந்த விவரங்களின் அடிப்படையில், பொட்டேபள்ளி ராதாகிருஷ்ணாவின் கணக்கு காசோலை என்பது என தெரியவந்தது.

மேலும் அவரது கணக்கில் ரூ.17 மட்டும் இருப்பு இருந்தது தெரியவந்துள்ளதாம்.

இதுகுறித்து முழுமையான விவரங்களை எடுக்க கோயில் தேவஸ்தான அதிகாரிகள் முடிவு செய்துள்ளனராம்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version