Home Srilanka ரணில் அரசை ஓட ஓட விரட்டியடிப்போம்! – ஜே.வி.பி. சூளுரை.

ரணில் அரசை ஓட ஓட விரட்டியடிப்போம்! – ஜே.வி.பி. சூளுரை.

0

“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவையும், அவர் தலைமையிலான மொட்டு அரசையும் ஓட ஓட விரட்டியடிப்போம். அந்த நாள் நெருங்கி வருகின்றது. மக்கள் படை எம் பக்கமே நிற்கின்றது.”

இவ்வாறு ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க எம்.பி. தெரிவித்தார்.

சமகால அரசியல் நிலவரம் தொடர்பில் கருத்துரைக்கும்போது அவர் மேலும் கூறியதாவது:-

“தானும் அரசும் கவிழப் போகின்றதை  ரணில் விக்கிரமசிங்க உணர்ந்துவிட்டார். அதனால்தான் ஆட்சிக் கவிழ்ப்புக்கு இடமில்லை என்று அவர் உளறுகின்றார்.

மக்கள் ஆணை இல்லாத ஒருவர் எப்படி ஜனாதிபதி பதவியில் இருக்க முடியும்? மக்கள் ஆணையை இழந்த அரசு எப்படி ஆட்சியைத் தொடர முடியும்? இலங்கையில் விசித்திரமான ஜனாதிபதி தலைமையிலான அரசு பதவியில் இருக்கின்றது.

மக்களை வதைக்கும் இந்த அரசை விரட்டியடிக்க மக்கள் அனைவரும் ஒன்றிணைய ஆரம்பித்துள்ளார்கள். ரணில் – மொட்டு அரசை ஓட ஓட விரட்டியடிப்போம்.” – என்றார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version