வவுனியா பூந்தோட்டம் பகுதியில் உள்ள மதுபானசாலை ஒன்றில் கடந்த வெள்ளிக்கிழமை (18) குடும்பஸ்தர் ஒருவர் மீது இரு நபர்கள் மேற்கொண்ட தாக்குதலில் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் இன்று ஞாயிற்றுக்கிழமை (20) காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
வவுனியா மகாறம்பைக்குளம் காந்தி வீதியை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான பிரதீபன் (தீபன்) என்பவரே இவ்வாறு உயிரிழந்தார்.
இவர் மீது தாக்குதல் மேற்கொண்டதாக கூறப்படும் சந்தேக நபர்கள் இருவரில் பூந்தோட்டம் பகுதியை சேர்ந்த 32 வயதுடைய பிரதான சந்தேக நபர் வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மற்றும் ஒரு சந்தேக நபரை பொலிஸார் தேடி வருகின்றனர்.