Home Srilanka வன்முறைக்கு இனி இடமில்லை! – பிரதமர் திட்டவட்ட அறிவிப்பு.

வன்முறைக்கு இனி இடமில்லை! – பிரதமர் திட்டவட்ட அறிவிப்பு.

0

“இனவாதத்தாலும் வன்முறையாலும் மீண்டும் இங்கு இரத்த ஆறு ஓடக் கூடாது என்பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியாகவுள்ளார்” என்று பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

“இனவாதக் கருத்துக்கள் ஊடாக வன்முறையைத் தூண்ட இந்த நாட்டில் எவருக்கும் இனி அனுமதி இல்லை.

இன, மத பேதமின்றி நாம் செயற்பட வேண்டும். நாட்டின் பிரஜைகள் அனைவரும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் போன்று ஒற்றுமையாகச் செயற்பட வேண்டும்.

அப்போதுதான் நல்லிணக்கம் இங்கு நிரந்தரமாகும்.” – என்றார்.

தான் வடக்கு, கிழக்குக்குச் செல்லவுள்ளதாகவும், அங்கே விகாரைகள் மற்றும் பிக்குகள் மீது கை வைக்க முயன்றால் அங்குள்ளவர்களின் தலைகளுடனேயே களனிக்குத் திரும்பவுள்ளதாகவும் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்திருந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையிலேயே பிரதமர் தினேஷ் குணவர்த்தன மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version