Home Srilanka முல்லைத்தீவைச் சேர்ந்த குடும்பஸ்தர் கொழும்பில் சடலமாக மீட்பு!

முல்லைத்தீவைச் சேர்ந்த குடும்பஸ்தர் கொழும்பில் சடலமாக மீட்பு!

0

கொழும்பில் தமிழ்க் குடும்பஸ்தர் ஒருவர் நேற்றிரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவைச் சேர்ந்தவரும் கொழும்பு – மகரகம பிரதேசத்தில் வசித்து வருபவருமான தனபாலசிங்கம் வைகுந்தன் (வயது 39) என்ற நபரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர், கடந்த 7 வருடங்களாகக் குடும்பத்தினருடன் மகரகமவில் வசித்து வந்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

சிகை அலங்கார நிலையத்தில் பணியாற்றி வந்த குறித்த நபர், நேற்று மாலை 5 மணியளவில் பணி முடிந்து வீடு திரும்புவதாக மனைவியிடம் தெரிவித்துள்ளார்.

எனினும், வீட்டுக்கு வருகை தராத அவரைக் குடும்பத்தினர் நேற்றிரவு 7.30 மணியளவில் தேடியபோது வீட்டுக்கு அருகாமையில் சடலமாகக் கிடந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ள பொலிஸார், சடலத்தைப் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version