Home Srilanka யாழ். பல்கலையில் செஞ்சோலை படுகொலை நினைவேந்தல் நிகழ்வு!

யாழ். பல்கலையில் செஞ்சோலை படுகொலை நினைவேந்தல் நிகழ்வு!

0

செஞ்சோலைப் படுகொலையின் 17 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் பிரதான வளாகத்தில் நடைபெற்றது.

யாழ். பல்கலைக்கழக  பிரதான தூபி வளாகத்தில் ஒன்றுகூடிய மாணவர்கள், உயிர்நீத்த பாடசாலை மாணவர்களின் உருவப்படத்துக்கு மலரஞ்சலி செலுத்தி – ஈகைச் சுடரேற்றி ஒரு நிமிட அகவணக்கமும் செலுத்தினர்.

கடந்த 2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்டம், புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவில் வள்ளிபுனம் கிராமத்தில் அமைந்திருந்த செஞ்சோலை சிறுவர் இல்லத்தின் மீது  வான்படையினர் மேற்கொண்ட விமானத் தாக்குதலில் 53 பாடசாலை மாணவிகள் படுகொலை செய்யப்பட்டனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version