Home Srilanka குருந்தூரில் எதிர்வரும் 18 ஆம் திகதி பொங்கல் விழா : பங்கேற்குமாறு ரவிகரன் அழைப்பு.

குருந்தூரில் எதிர்வரும் 18 ஆம் திகதி பொங்கல் விழா : பங்கேற்குமாறு ரவிகரன் அழைப்பு.

0

முல்லைத்தீவு குருந்தூர்மலையில் எதிர்வரும் 18ஆம் திகதி, ஆதிசிவன் ஐயனாருக்கு பொங்கல் விழா ஒன்றினை மேற்கொள்ளவுள்ளதாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

எனவே அனைவரும் இந்த பொங்கல் விழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறும் அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தில் எதிர்வரும் 18ஆம் திகதி வெள்ளிக்கிழமை, ஆதிசிவன் ஐயனாருக்குப் பொங்கல் மேற்கொள்வதற்கு ஆலய நிர்வாகம் தீர்மானித்திருக்கின்றது.

எனவே மக்கள் அனைவரும் குருந்தூர்மலைக்கு வருகைதந்து ஆதிசிவன் ஐயனாரின் அருளைப் பெறுவதோடு, பொங்கல் விழாவையும் சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

இந்த விடயமானது நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டநிலையில், தொல்லியல் திணைக்களம் சைவவழிபாடுகளை மேற்கொள்தற்கு எந்தத் தடையுமில்லை எனத் தெரிவித்திருந்தது.

அதற்கமைய இந்த பொங்கல் வழிபாடுகள் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளன. எனவே அனைவரும் இந்தப் பொங்கல் விழாவில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம் என்றார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version