இனப் படுகொலையாளி மகிந்த ராஜபக்சவைத் தனது வீட்டுத் திருமணத்திற்கு அழைத்ததை விமர்சித்தவர்களுக்குப் பதில் சொல்லும் முகமாக இதைச் சொல்லியிருக்கிறார் வித்தியாதரன்.
பத்திரிகையாளன் பணி நிமித்தமாக கோத்தபாய முதல் அல்கைதா தலைவர் வரை யாரையும் சந்திக்கலாம். ஆனால் வீட்டுக்குப் போய் கூட்டிக் கொண்டு வந்து விருந்து வைக்கிறதுக்குப் பெயர் பத்திரிகையாளன் இல்லை.
அதற்கு வரலாற்றில் வேறு பெயர் இருக்கிறது. வறுமையின் நிமித்தம் தமது உடலை விற்று நேர்மையாக உழைக்கும் பாலியல் தொழிலாளர்களை புண்படுத்தும் என்பதால் அந்த வார்த்தையை இங்கு எழுத விரும்பவில்லை.
இது ஒரு பக்கம் இருக்கட்டும். பத்திரிகையாளனுக்கு எதற்கு வட மாகாண சபை முதலைமைச்சர் பதவி.?
2009 இலிருந்து இன்று வரை அரசியல் கட்சிகளிடம் ஏதோ ஒரு கதிரைக்குப் பேரம் பேசிக் கொண்டிருப்பவர்தான் வித்தியாதரன். இந்த இலட்சணத்தில் பத்திரிகைத்துறை குறித்து மற்றவர்களுக்கு வகுப்பு எடுக்கிறார்.
ஒன்று ஊடகவியலாளனாக இருங்கள். அல்லது அரசியல்வாதியாக இருங்கள். இப்படி ‘ஊடக அரசியல்வியாதியாக’ இருக்காதீர்கள்.
சொந்த மகளை ஒரு இனமே தூற்றினாலும் பரவாயில்லை என்று மகிந்தவை வீட்டுக்குக் கூப்பிட்ட மர்மம் வேறு யாருக்கும் தெரியாமல் இருக்கலாம். ஆனால் எமக்குத் தெரியும்.
ரணில் எந்த நேரமும் வீட்டுக்குப் போகலாம். மீண்டும் இனவாதம் முறுக்கேறித் திரண்டு போயிருக்கும் சிங்களம் மகிந்த குடும்பத்தில் ஒருவரை அதிபராக்கவே வாய்ப்புள்ளது.
தமிழ் அரசியல்வாதிகளினூடாக அடைய முடியாத தனது ‘கதிரையை’ இன அழிப்பு அரசுக்குச் செம்படித்துப் பெற்றுக் கொள்ளும் நகர்வின் ஒரு பகுதிதான் இது.
எனவே மகிந்தவை வளைப்பதனூடாக வடக்கில் தனது ‘கதிரைக்கான’ துண்டைப் போட்டிருக்கிறார் இந்த ‘ஊடக அரசியல்வாதி’.