Home Cinema நடிகர் சத்யராஜின் தாயார் காலமானார்.

நடிகர் சத்யராஜின் தாயார் காலமானார்.

0

நடிகர் சத்யராஜின் தாயார் நாதாம்பாள் வயது மூப்பின் காரணமாக நேற்று காலமானார்.அவருக்கு வயது 94.

நடிகர் சத்யராஜின் தாயார் நாதாம்பாள் காளிங்கராயர். இவர் கோவையில் வசித்து வந்தார். இந்நிலையில், வயது மூப்பின் காரணமாக நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை 4 மணிக்கு கோவையில் அவர் காலமானார்.

நடிகர் சத்யராஜ் ஹைதராபாத்தில் படப்பிடிப்பு ஒன்றில் இருந்துள்ளார். தாயின் இறப்பு செய்தியறிந்த அவர் உடனடியாக கோவைக்கு விரைந்துள்ளார். நாதாம்பாளுக்கு சத்யராஜ் மற்றும் கல்பனா மன்றாடியார், ரூபா சேனாதிபதி ஆகிய பிள்ளைகள் உள்ளனர். சத்யராஜின் தாயார் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version