Home Srilanka வடமராட்சி கொள்ளை சம்பவம் :இரண்டு வருடங்களின் பின் முகமூடி கொள்ளை சந்தேகநபர்கள் கைது.

வடமராட்சி கொள்ளை சம்பவம் :இரண்டு வருடங்களின் பின் முகமூடி கொள்ளை சந்தேகநபர்கள் கைது.

0

யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் கொள்ளையிட்ட முகமூடி கொள்ளை சந்தேகநபர்கள் பருத்தித்துறை பொலிஸாரினால் நேற்றைய தினம் (05) சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 2021ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 16ஆம் திகதி அல்வாய் பகுதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்த மூன்று பேர் கொண்ட முகமூடி கொள்ளை கும்பல் , நகை பணம் மற்றும் தொலைபேசி என்பவற்றை கொள்ளையடித்து சென்று இருந்தது.

சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் , முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர். இந்நிலையில், சந்தேக நபர்கள் தலைமறைவாகி இருந்த நிலையில் , சுமார் 2 வருட கால பகுதிக்கு பின்னர் நேற்றைய தினம் சனிக்கிழமை இருவரை கைது செய்துள்ளனர்.

மேலும் ஒரு சந்தேகநபர் தொடர்ந்தும் தலைமறைவாக உள்ள நிலையில் அவரை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ள பொலிஸார் , கைது செய்யப்பட்ட நபர்களை விசாரணைக்கு உட்படுத்தி வருகின்றனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version