புங்குடுதீவு பகுதியில் மக்களே குடிநீர் இல்லாது அல்லலுறும் இந்நாட்களில் அங்குள்ள கால்நடைகளுக்கு நீரின்றி தவிப்பதை உணர்ந்து அதற்கான தீர்வாக தொட்டி அமைத்து அதற்கு பவுசர் மூலம் நீர் நிறைத்து கால்நடைகளுக்கான நீர்த்தாகம் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது.
காலத்தினால் செய்த உதவி, சிறிது எனினும் ஞாலத்தின் மாணப் பெரிது –
கேரதீவு, ஊரதீவு. மடத்துவெளி, குறிச்சுக்காடு போன்ற இடங்களில் மாடுகளுக்காக தண்ணீர் வழங்க அமைக்கப்பட்டிருக்கும் தண்ணீர் தொட்டிகளுக்கு 4000 லீற்றர் தண்ணீர் வேலணை – சாட்டியிலிருந்து பவுசர் மூலம் பெறப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஆத்மார்த்தமான பணிகளில் ஈடுபட்டுள்ள அனைத்து நல்லுள்ளங்களுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்.