Home Srilanka யாழ்ப்பாணம் நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்தொன்று

யாழ்ப்பாணம் நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்தொன்று

0

வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்தொன்று நேற்று இரவு (03) விபத்திற்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் பேருந்தின் சாரதியொருவர் படுகாயமடைந்த நிலையில் பயணிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்து இன்றிரவு 7 மணியளவில் புத்தூர் சந்தி பகுதியில் உள்ள பேருந்து பயணிகள் தரிப்பிடத்தில் மோதியமையினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்து தொடர்பில் பேருந்தில் முன் இருக்கையில் பயணித்த பயணிகள் தெரிவிக்கையில்…

விபத்து இடம்பெறுவதற்கு சற்றுமுன்னர் திடீரென பேருந்தின் பிரேக் மற்றும் ஸ்ரேறிங் இயங்கவில்லையென சாரதி தெரிவித்த சில விநாடிகளில் விபத்து இடம்பெற்றதாக குறிப்பிட்டுள்ளனர்.

இவ்விபத்தின் போது யாழ்ப்பாணத்தில் இருந்த சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து மற்றும் டிப்பர் வாகனங்களும் சிறிதளவு சேதமடைந்துள்ளதோடு 50 வருடங்களுக்கு மேற்பட்ட பழமையான பயணிகள் தரிப்பிடம் முற்றாக இடிந்து விழுந்துள்ளது.

இந்நிலையில் விபத்து தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் மேலதிய விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அண்மையில் யாழ்ப்பாணத்தில் வைத்து இந்திய அரசால் வழங்கப்பட்ட இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான புதிய பேருந்தே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version