Home Srilanka Sports தென் ஆப்பிரிக்காவுக்கு own goal போட்டு கொடுத்து வெற்றியை பறிகொடுத்த இத்தாலி.

தென் ஆப்பிரிக்காவுக்கு own goal போட்டு கொடுத்து வெற்றியை பறிகொடுத்த இத்தாலி.

0

பெண்களுக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடர் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. 32 அணிகள் 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவிலும் நான்கு அணிகள் இடம்பிடித்துள்ளது. நாளையுடன் லீக் போட்டிகள் முடிவடைகிறது.

இதுவரை நடந்து முடிந்த போட்டிகள் முடிவில் சுவிட்சர்லாந்து, ஸ்பெயின், நெதர்லாந்து, ஜப்பான் நார்வே, ஸ்வீடன், அமெரிக்கா, இங்கிலாந்து, நைஜிரியா, ஆஸ்திரேலியா, டென்மார்க் ஆகிய அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இந்நிலையில் இன்று ஜி பிரிவில் நடைபெற்ற போட்டியில் தென் ஆப்பிரிக்கா – இத்தாலி அணிகள் மோதின. 11-வது நிமிடத்தில் முதல் கோலை இத்தாலி அணி போட்டது. தென் ஆப்பிரிக்கா அணி கோல் போட முடியாமல் தவித்த நிலையில் இத்தாலி அணி வீராங்கனையான பெனெடெட்டா ஒர்சி தங்களது அணி பக்கமே கோலை போட்டுகொடுத்தார்.

இதனால் முதல் பாதியில் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சம நிலையில் இருந்தது. இதனையடுத்து நடந்த 2-வது பாதியில் 67-வது நிமிடத்தில் தென் ஆப்பிரிக்கா அணியும் 74-வது நிமிடத்தில் இத்தாலி அணியும் கோல் போட்டனர். இதனால் இரு அணிகளும் 2-2 என்ற கணக்கில் இருந்தனர். இந்த பரபரப்பான ஆட்டத்தில் இறுதி நிமிடத்தில் தென் ஆப்பிரிக்கா அணி ஒரு கோலை போட்டதன் 3-2 என்ற கணக்கில் இத்தாலியை வீழ்த்தியது. ஓன் கோலால் இந்தாலி அணி தங்களது வெற்றி வாய்ப்பை இழந்தது பரிதாபத்துக்குரியதாக இருந்தது

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version