Home World சீனாவில் கடும் மழையினால் 20 பேர் பலி, 19 பேர் மாயம்.

சீனாவில் கடும் மழையினால் 20 பேர் பலி, 19 பேர் மாயம்.

0

சீனாவில், சூறாவளியினால் ஏற்பட்ட கடும் மழை காரணமாக 20 பேர் உயிரிழந்ததுடன் மேலும் 19 பேர் காணாமல் போயுள்ளனர் என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தோக்சூரி எனும் சூறாவளி காரணமாக, தொடர்ச்சியாக 4 ஆவது நாளாக சீனாவில் கடும் மழை பெய்து வருகிறது.

இதனால், பல நதிகளின் நீர்மட்டம் முன்னெப்போதும் இல்லாத அளவு அதிகரித்துள்ளதுடன் பல பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில், குறைந்தபட்சம் 20 பேர் பலியானதுடன் மேலும் 19 பேரை காணவில்லை என சீன அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சீன தலைநகர் பெய்ஜிங்கில் சுமார் 52,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதுடன், 100 இற்கும் அதிகமான வீதிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்பட்டுள்ளன.

மேலும் பெய்ஜிங் வெள்ளம் காரணமாக ரயில் பயணத்தைத் தொடர முடியாதுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ரயில் நிலையமொன்றிலும் அதனைச் சூழ்ந்த பகுதிகளிலும் சிக்கிய மக்களுக்கு உணவுப் பொதிகளை விநியோகிப்பதற்கான 4 ஹெலிகொப்டர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version