Home Srilanka Sports ஆஷஸ் தொடரை போராடி 2-2 என சமன் செய்தது இங்கிலாந்து.

ஆஷஸ் தொடரை போராடி 2-2 என சமன் செய்தது இங்கிலாந்து.

0

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மோதிய ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவலில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இங்கிலாந்து அணி முதலில் களமிறங்கியது. ஹாரி புரூக் மட்டும் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 85 ரன்னில் ஆட்டமிழந்தார்.

பென் டக்கெட் 41 ரன்னும், கிறிஸ் வோக்ஸ் 36 ரன்னும், மொயீன் அலி 34 ரன்னும் எடுத்தனர். இறுதியில், இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 54.4 ஓவரில் 283 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலியா சார்பில் மிட்செல் ஸ்டார்க் 4 விக்கெட்டும், ஹேசில்வுட், மர்பி தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து ஆடிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 295 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஸ்டீவ் ஸ்மித் 71 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து சார்பில் கிறிஸ் வோக்ஸ் 3 விக்கெட்டும், பிராட், மார்க் வுட், ஜோ ரூட் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். 12 ரன்கள் பின்தங்கிய நிலையில், இங்கிலாந்து 2வது இன்னிங்சை தொடங்கியது.

இங்கிலாந்து 395 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஜோ ரூட் 91 ரன்னும், ஜானி பேர்ஸ்டோவ் 78 ரன்னும், சாக் கிராவ்லே 73 ரன்னும் எடுத்தனர். ஆஸ்திரேலியா சார்பில் மிட்செல் ஸ்டார்க், டாட் மர்பி ஆகியோர் தலா 4 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, 384 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்சை ஆடியது. நான்காம் நாள்முடிவில் ஆஸ்திரேலியா 38 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 135 ரன்கள் எடுத்திருந்தது. டேவிட் வார்னர் 58 ரன்னும், உஸ்மான் கவாஜா 69 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இந்நிலையில், ஐந்தாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. 249 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா இறங்கியது.

அணியின் எண்ணிக்கை 140 ஆக இருந்தபோது வார்னர் 60 ரன்னில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து உஸ்மான் கவாஜா 72 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய லாபுசேன் 13 ரன்னில் வெளியேறினார். ஸ்டீவ் ஸ்மித் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 54 ரன்கள் எடுத்தார். அவருக்கு டிராவிஸ் ஹெட் நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார். ஹெட் 43 ரன்னில் அவுட்டானார். கடைசி கட்டத்தில் அலெக்ஸ் கேரி பொறுப்புடன் ஆடி 28 ரன்கள் எடுத்தார்.

இறுதியில், ஆஸ்திரேலியா 2வது இன்னிங்சில் 334 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் மூலம் 49 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து போராடி வெற்றி பெற்றது. இதையடுத்து ஆஷஸ் தொடர் 2-2 என சமனில் முடிந்தது. இங்கிலாந்து சார்பில் கிறிஸ் வோக்ஸ் 4 விக்கெட்டும், மொயீன் அலி 3 விக்கெட்டும், ஸ்டூவர்ட் பிராடு 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version