ஆகஸ்ட் மாதம் இரண்டு சந்திர கிரகணங்கள் நிகழவுள்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய ஆகஸ்ட் மாதம் முதலாம் மற்றும் 30 ஆம் திகதிகளில் இந்த சந்திர கிரகணங்கள் நிகழவுள்ளன.
ஆகஸ்ட் 1 ஆம் திகதி, இலங்கை நேரப்படி மாலை 06 மணி 31 நிமிடங்களில் முழு சந்திரன் (பௌர்ணமி) காட்சியளிக்க உள்ளது.
தென்கிழக்கில் வெறும் 222,159 மைல்கள் (357,530 கிமீ) தொலைவில் இருந்து முழு சந்திரன் உதயமாகும் என்பதால், ஆகஸ்ட் 1 ஆம் திகதி மாலை முதல் மக்கள் பார்வையிட முடியும்.
ஆகஸ்ட் 30 புதன்கிழமை இரவு, 222,043 மைல்கள் (357,344 கிமீ) தொலைவில் இது இன்னும் மிக அருகில் காட்சியளிக்க உள்ளது.
மேலும் இது இரண்டாவது முழு சந்திரன் என்பதால், இது நீல சந்திரன் என்று அழைக்கப்படுகிறது. சந்திரன் பூமியிலிருந்து மிகத் தொலைவில் இருக்கும் போது இந்த புள்ளிவிவரங்கள் சுமார் 252,088 மைல்கள் (405,696 கிமீ) தூரத்துடன் ஒப்பிடுகின்றன.
பூமி மற்றும் சந்திரன் ஆகியவை ஒரே நேர்க்கோட்டில் வரும்போது, சூரிய ஒளி சந்திரனில் படாது. அந்த நிகழ்வே சந்திர கிரகணம் ஆகும்.
ஒவ்வொரு மாதமும் சந்திரன் ஒரு நீள்வட்ட சுற்றுப்பாதையில் பூமியை சுற்றி வருகிறது.
அது பூமிக்கு மிக அருகில் வரும்போது, முழு சந்திரனாக (பௌர்ணமி) இருப்பின், ‘சூப்பர்மூன்’ என்று அழைக்கப்படுகிறது.
இந்த நிகழ்வின் போது, முழு சந்திரன், ஆண்டின் மங்கலான நிலவை விட 17 சதவீதம் பெரியதாகவும் 30 சதவீதம் பிரகாசமாகவும் தோன்றுகிறது.