அந்த 7 கிலோமீட்டரிலே இருந்து மூன்று கிலோமீட்டர் உயரம் வர படுக்கை வசமாக இருந்த இறங்கும்வாகனம் நேராக திருப்பி
ஒரு கிலோமீட்டர் தூரம் உயரத்திலே அப்படியே நிலை நின்று பறந்து இறங்கும் இடத்தை தேடி
பின்பு 700 மீட்டர் உயரம் வந்தவுடன் திரும்பவும் சரியான இடத்தை துல்லியமாக பார்த்து
மெதுவாக இறங்கியது சரியாக சொன்னபடி 6.03. சரியாக. கொஞ்சம் கூட தாமதம் ஆகவில்லை.
இந்த தொழில்நுட்பங்களின் அருமை என்பது இது ராணுவத்திலேயும், தொலைத்தொடர்பிலும், மருத்துவத்திலேயும் பயன்படுத்தப்படும்போது புரியும்.
எனவே இது பெரும் சாதனை.
யோசிச்சு பாருங்க
அங்கே நிலவிலே 1 கிலோமீட்டர் உயரத்திலே அப்படியே நிலையான நின்னு தேடி அப்புறம் இறங்குது. இது எதுவுமே இங்கே இருந்து கட்டளைகள் கொடுக்கப்படவில்லை.
இந்த மொத்த 30 நிமிடத்திலேயும் ஒரு விநாடிக்கு ஒரு படம் எடுத்து அனுப்பிட்டேவும் இருந்தது.
சாதனைன்னா அரும் பெரும் சாதனை.