பிலிப்பைன்ஸ் நாட்டின் பினன்ஹொன் நகரில் இருந்து ஏரி வழியாக தலிம் தீவிற்கு 70 பயணிகள் படகு பயணம் மேற்கொண்டனர். . ஏரியில் படகு சென்று கொண்டிருந்தபோது திடீரென பலத்த காற்றுடன், கனமழை பெய்தது. இதனால், பயணிகள் அனைவரும் படகின் ஒரு பக்கத்தில் குவிந்தனர். ஒரு பக்கத்தில் எடை அதிகரித்ததால் நிலை தடுமாறிய படகு ஏரியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், பயணிகள் அனைவரும் ஏரியில் மூழ்கினர்.
இந்த விபத்து குறித்து தகவலறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர். விபத்தில் இதுவரை 40 பயணிகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் 26 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில் விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் பலி எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது.