Home India Sports ஆஷஸ் 5வது டெஸ்ட் போட்டி- 2ம் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி முன்னிலை.

ஆஷஸ் 5வது டெஸ்ட் போட்டி- 2ம் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி முன்னிலை.

0

இங்கிலாந்து சென்றுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதல் இரு டெஸ்டில் ஆஸ்திரேலியாவும், 3-வது டெஸ்டில் இங்கிலாந்தும் வெற்றி பெற்றன. மான்செஸ்டரில் நடந்த 4-வது டெஸ்ட் டிராவில் முடிந்தது. இதனால் தொடரில் ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவலில் இன்று தொடங்கியது.

இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இங்கிலாந்து அணி முதலில் களமிறங்கியது. முதல் விக்கெட்டுக்கு 62 ரன்கள் சேர்த்த நிலையில் பென் டக்கெட் 41 ரன்னில் அவுட்டானார். முன்னணி வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை. ஹாரி புரூக் மட்டும் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 85 ரன்னில் ஆட்டமிழந்தார். கிறிஸ் வோக்ஸ் 36 ரன்னும், மொயீன் அலி 34 ரன்னும் எடுத்தனர். இறுதியில், இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 54.4 ஓவரில் 283 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலியா சார்பில் மிட்செல் ஸ்டார்க் 4 விக்கெட்டும், ஹேசில்வுட், மர்பி தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்சை விளையாட தொடங்கியது. இதில், ஆஸ்திரேலிய அணி ஆட்டி நேர முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 61 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து, இன்று 2வது நாள் ஆட்டம் நடைபெற்றது.

இதில், ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சை விளையாடியது. டேவிட் வார்னர் 24 ரன்கள் எடுத்து அவுட்டானார். தொடர்ந்து, மார்னஸ் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். முதலில் களமிறங்கிய உஸ்மாவ் கவாஜா 47 ரன்கள் எடுத்து அவுட்டானார். தொடர்ந்து, டிராவிஸ் ஹெட் 4 ரன்களிலும், மிட்செல் மார்ஷ் 16 ரன்களிலும், அலெக்ஸ் காரே 10 ரன்களிலும், மிட்செல் ஸ்டார்க் 7 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ஸ்டீவன் ஸ்மித் சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்து 71 ரன்கள் எடுத்து அவுட்டானார். டோட் முர்பி 34 ரன்களிலும், பாட் கம்மின்ஸ் 36 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். கடைசியாக, ஜோஷ் ஹாசில்வுட் 6 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் உள்ளார்.

இந்நிலையில், 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 103.1 ஓவரில் 10 விக்கெட் இழப்பிற்கு 295 ரன்கள் எடுத்தது. இதன்மூலம், இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில், ஆஸ்திரேலிய அணி 12 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version