Home Srilanka கார் விபத்தில் வெளிநாட்டுப் பிரஜை உட்படமூவர் உயிரிழப்பு.

கார் விபத்தில் வெளிநாட்டுப் பிரஜை உட்படமூவர் உயிரிழப்பு.

0

ஐவர் பயணித்த கார் ஒன்று பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்த சம்பவம் இன்று (29) பதிவாகியுள்ளது.

விபத்தில் இறந்த மூவரில் ஒருவர் ரஷ்ய பிரஜை என்பதும் குறிப்பிடத்தக்கது.

குறித்த காரானது புஸ்ஸே எல பகுதியில் ஹுன்னஸ்கிரிய – மீமுரே வீதியில் பயணித்துக்கொண்டிருந்த வேளையில், வாகனம் சாலையை விட்டு விலகி பள்ளத்தில் விழுந்து விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

விபத்தில் காயமடைந்த மற்றைய இருவரும் மெதமஹனுவர பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்களில் கண்டியைச் சேர்ந்த பெண்ணொருவரும் அடங்குவதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version