Home Srilanka முல்லைத்தீவில் கடலுக்கு சென்ற குடும்பஸ்தரை காணவில்லை…

முல்லைத்தீவில் கடலுக்கு சென்ற குடும்பஸ்தரை காணவில்லை…

0

முல்லைத்தீவு கடலில் கடற்தொழிலுக்கு சென்ற குடும்பஸ்தார் கடந்த இரண்டுநாட்களாக காணாத நிலையில் அவரை தோடும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளதுடன் இது தொடர்பில் முல்லைத்தீவு பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 27.07.23 அன்று கள்ளப்பாடு தெற்கில் வசிக்கும் 39 அகவையுடைய நவரத்தினம் சுதேந்திரன் என்றகுடும்பஸ்தர் ஒருவர் படகில் தனியாக கடற்தொழிலுக்கு சென்றுள்ளார்.

அன்றைய தினம் காலையாகியும் குறித்த நபர் கரை திரும்பாத நிலையில் கடலில் தனிமையில் இருந்த படகினை ஏனைய மீனவ படகுகள் அவதானித்து அந்த இடத்திற்கு சென்றபோது கடலில் படகு மற்றும் மிதந்து கொண்டிருப்பது தெரியவந்துள்ளது.

நீண்ட நேரமாக தேடியும் அவரை காணாத நிலையில் படகினை இழுந்து கொண்டு கரை வந்துள்ளார்கள்.

படகில் அவரது சறம் மற்றும் உடைகள் காணப்பட்ட நிலையில் இது குறித்து மீனவ சங்கத்தினால் முல்லைத்தீவு பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

காணாமல் போன மீனவரை ஏனை மீனவ படகுகள் தேடியும் இதுவுரை கண்டு பிடிக்கப்படவில்லை இரண்டு நாட்கள் கழிந்தும் மீனவரை தேடும் பணியில் ஏனைய மீனவ படகுகள் ஈடுபட்டு வருகின்றார்கள்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version