பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், வனுவாட்டு மற்றும் பப்புவா நியூகினியாவுக்கான விஜயத்தை முடித்துக் கொண்டு பிரான்ஸ் திரும்பும் வழியில், நாளை (28) இரவு இலங்கை வரவுள்ளதாக எலிஸி அரண்மனை அறிவித்துள்ளது.
பிரான்ஸ் ஜனாதிபதி ஒருவர் இலங்கைக்கு விஜயம் செய்வது இதுவே முதல் தடவையாகும்.
நாளை (28) இரவு இலங்கை வரும் பிரான்ஸ் ஜனாதிபதி நாளை (29) காலை இலங்கையை விட்டு திரும்புவார்.
அவர் இலங்கையில் தங்கியிருக்கும் குறுகிய காலத்தில் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக எலிஸி மாளிகை தெரிவித்துள்ளது.
இலங்கைக்கும் பிரான்ஸுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த இது ஒரு வாய்ப்பாக அமையும் என்றும், இரு நாடுகளும் எதிர்கொள்ளும் பிராந்திய மற்றும் சர்வதேச சவால்கள் குறித்து கலந்துரையாடுவதற்கான வாய்ப்பாக இது அமையும் என்றும் எலிசி மாளிகை சுட்டிக்காட்டியுள்ளது.
எலிசி அரண்மனை பிரெஞ்சு ஜனாதிபதியின் அதிகாரப்பூர்வ இல்லமாகும்.