தமிழ் சினிமாவில் நல்ல காமெடியனாக வலம் வந்தவர் தான் சூரி. இப்போது காமெடி நடிகர் என்பதை தாண்டி வெற்றிமாறன் இயக்கிய விடுதலை படத்தின் மூலம் நாயக அவதாரம் எடுத்துள்ளார்.
கான்ஸ்டேபிள் கதாபாத்திரத்திற்கு அப்படியே பொருந்தி நடித்திருந்தார் சூரி. முதல் பாகத்தை தொடர்ந்து இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்புகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் சூரி ஹீரோவாக நடிக்க அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிந்து வருகிறது.
சிவகார்த்திகேயன் தயாரிக்கும் கொட்டுக்காளி படத்திலும் கதையின் நாயகனாக நடித்து வருகிறார் சூரி.
மதுரையில் இருந்து சென்னைக்கு வந்து வாய்ப்பு தேடிய சூரி பல கஷ்டங்களை அனுபவித்திருக்கிறார், சில சம்பவங்களை அவர் பகிர்ந்தும் உள்ளார்.
ஆரம்பத்தில் சாப்பிட கூட காசு இல்லாமல் தவித்த சூரியின் சொத்து மதிப்பு ரூ. 40 முதல் 50 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது. காமெடியனாக நடிக்க சூரி ரூ. 1 முதல் 2 கோடி வரை சம்பளம் பெருகிறாராம்.