Home Cinema சூர்யாவின் ‘கங்குவா’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது.

சூர்யாவின் ‘கங்குவா’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது.

0

இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா தற்போது நடித்து வரும் திரைப்படம் ‘கங்குவா’. ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இந்த படம் 3டி முறையில் சரித்திர படமாக 10 மொழிகளில் வெளியாகவுள்ளது. ‘கங்குவா’ திரைப்படத்தின் மோஷன் போஸ்டரை சமீபத்தில் படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது.

இந்த நிலையில், நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு ‘கங்குவா’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.முன்னதாக ‘கங்குவா’ படத்தின் கிளிம்பஸ் வீடியோ இன்று வெளியானது குறிப்பிடத்தக்கது .

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version