Home Cinema ‘எல்.ஜி.எம்.’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் தோனி..?

‘எல்.ஜி.எம்.’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் தோனி..?

0

கிரிக்கெட் வீரர் தோனியும், அவரது மனைவி சாக்ஷியும் இணைந்து ‘தோனி எண்டர்டெயின்மெண்ட்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தமிழில் ‘லெட்ஸ் கெட் மேரிட்’ என்ற படத்தை தயாரித்துள்ளனர்.

ரமேஷ் தமிழ்மணி இயக்கியுள்ள இப்படத்தில் ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் வரும் ஜூலை 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக படக்குழு சமீபத்தில் அறிவித்திருந்த நிலையில் தற்போது புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. இப்படத்தில் தோனி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. இதனால் தோனி ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version