Home Srilanka 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்தில் 59 வயது தேரர் பொலிஸாரால் கைது.

11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்தில் 59 வயது தேரர் பொலிஸாரால் கைது.

0

மச்சவாச்சியில் 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படும் தேரர் ஒருவரை அம்பன்பொல பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் கைது செய்துள்ளது.

மச்சவாச்சி – வனமல்கொல்லாவ பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் பணிபுரிந்து வாழ்ந்து வரும் 59 வயதுடைய தேரர் ஒருவரே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் அம்பன்பொல நகரில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுமி அப்பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் 07 ஆம் தரத்தில் கல்வி கற்று வருகிறார்.

அந்த சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக நிகவெரட்டிய ஆதார வைத்தியசாலைக்கு அனுப்ப பொலிஸார் ஏற்பாடு செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தேரர் மஹவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version