இலங்கை- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலேயில் நடந்து வந்தது. இதில் முதல் இன்னிங்சில் இலங்கை 312 ரன்னும், பாகிஸ்தான் 461 ரன்னும் எடுத்தன.
149 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை விளையாடிய இலங்கை 279 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனால் பாகிஸ்தான் அணிக்கு 131 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. நேற்றைய 4-ம் நாள் ஆட்ட நேர முதலில் பாகிஸ்தான் 3 விக்கெட்டுக்கு 48 ரன் எடுத்திருந்தது. இமாம்-உல்-ஹக் (25 ரன்) கேப்டன் பாபர் ஆசம் (6 ரன்) களத்தில் இருந்தனர். இன்று கடைசி நாள் ஆட்டம் நடைபெற்றது. பாபர் ஆசம் 24 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார்.
அடுத்து வந்த ஷாகீல் 30 ரன்கள் எடுத்து வெளியேறினார். இமாம்-உல்-ஹாக் அரைசதம் அடித்து நிலைத்து நிற்க பாகிஸ்தான் 6 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 133 ரன்கள் எடுத்து இலக்கை எட்டியது. இதனால் பாகிஸ்தான் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2-வது டெஸ்ட் கொழும்பில் வருகிற 24-ந்தேதி தொடங்குகிறது.