Home Cinema தூக்கிவிட்டதற்கே துரோகம் செய்த சிவகார்த்திகேயன்..

தூக்கிவிட்டதற்கே துரோகம் செய்த சிவகார்த்திகேயன்..

0

சாதாரண மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஆக இருந்த சிவகார்த்திகேயன் தற்போது டாப் நடிகர்களுக்கெல்லாம் டஃப் கொடுக்கும் அளவுக்கு முன்னணி நடிகராக வளர்ந்து நிற்கிறார். ஆனால் இவரை தூக்கி விட்டவருக்கு துரோகம் செய்திருப்பது தற்போது தெரியவந்துள்ளது. அந்த துரோகத்தை தாங்க முடியாமல் அந்த பிரபலமும் இனி சிவகார்த்திகேயனுடன் எந்த காலமும் கூட்டணி போட மாட்டேன் என வைராக்கியத்துடன் இருக்கிறாராம். இதைப் பற்றி திரை விமர்சகர் பிஸ்மி சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளார்.

சிவகார்த்திகேயன் என்னதான் மெரினா படத்தில் அறிமுகமானாலும் அவரை ஒரு ஹீரோவாக முன்னிலைப்படுத்திய படம் தான் வருத்தப்படாத வாலிபர் சங்கம். இந்தப் படம் வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணம் அந்தப் படத்தில் இடம்பெற்ற ‘ஊதா கலரு ரிப்பன்’ பாடல் தான். இந்தப் பாடலின் மூலம்தான் பட்டி தொட்டி எங்கும் சிவகார்த்திகேயன் பேமஸானார்.

இந்தப் பாடலை சிவகார்த்திகேயனுக்கு கொடுத்தவர் இசையமைப்பாளர் டி. இமான். இந்தப் பாடலை மட்டும் அந்த படத்தில் இருந்து தூக்கி விட்டு பார்த்தால் நிச்சயம் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் மிகப்பெரிய வெற்றியை அடைந்திருக்குமா என்பது சந்தேகம் தான். இதற்காகவே சிவகார்த்திகேயன் காலம் முழுக்க டி. இமானுக்கு நன்றி கடன் பட்டிருக்க வேண்டும்.

ஆனால் அந்த நன்றியை மறந்து இமானுக்கு சில துரோகங்களை சிவகார்த்திகேயன் செய்துவிட்டார். அதனால் தான் டி. இமான் இனிமேல் எந்த காலத்திலும் சிவகார்த்திகேயனின் படங்களுக்கு இசையமைக்க மாட்டேன் என்ற முடிவில் உறுதியாக இருக்கிறார். இந்த துரோகத்தை யாராலும் வெளியில் சொல்ல முடியாது. அப்படி ஒரு துரோகத்தை தான் இமானுக்கு சிவகார்த்திகேயன் செய்துவிட்டார்.

இதைப் பற்றி வெளிப்படையாக இமானாலும் சொல்ல முடியாது. ஏன் பல பேட்டிகளில் பல பிரபலங்களை பற்றி உடைத்து சொல்லும் திரை விமர்சகர் பிஸ்மியும் சொல்லவே முடியாது என உறுதியாக கூறிவிட்டார். அப்படிப்பட்ட கேவலமான காரியத்தை தான் சிவகார்த்திகேயன் டி. இமானுக்கு செய்துவிட்டார். சிவகார்த்திகேயன் செய்த விசயத்தால் மறுமுறை அவரால் இமானை கண் கொண்டு கூட பார்க்க முடியாது. அப்படி ஒரு விஷயத்தை தான் செய்து விட்டார். அதனால் தான் சிவகார்த்திகேயனுக்கு இப்போதைக்கு இருக்கு ஒரே நம்பிக்கை அனிருத் தான் என்று பிஸ்மி சமீபத்திய பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.

இந்த பேட்டியை பார்த்த நெட்டிசன்கள், அப்படி என்னதான் அந்த விசயம் என கடைசி வரை சொல்லாமலே ஏமாற்றி விட்டீர்களே என பிஸ்மியை கலாய்த்து தள்ளுகின்றனர். மேலும் பிஸ்மி எல்லா விஷயத்தையும் உடைத்து சொல்லும் போது இந்த விஷயத்தை மட்டும் எதற்கு மறைக்கிறார். ஒருவேளை இமானின் முதல் மனைவியை சிவகார்த்திகேயன் கரெக்ட் செய்து விட்டாரோ அதனால் தான் இமான் இரண்டாவது திருமணம் செய்து கொண்டாரா என்ற சந்தேகம் எழுகிறது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version