Home Srilanka புத்தளம் பகுதியில் விபத்து முன்னாள் எம்.பி விஜயகலா மகேஸ்வரன் தீவிர சிகிச்சைப் பிரிவில்……

புத்தளம் பகுதியில் விபத்து முன்னாள் எம்.பி விஜயகலா மகேஸ்வரன் தீவிர சிகிச்சைப் பிரிவில்……

0

  • முன்னாள் எம்.பி விஜயகலா மகேஸ்வரன் படுகாயம்

யாழ்ப்பாண மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் பயணித்த வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது.

யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த வாகனம் புத்தளம், முந்தல் பகுதியில் வைத்து வேகக்கட்டுப்பாட்டை இழந்து மரம் ஒன்றில் மோதி விபத்து நேர்ந்துள்ளதாக‌ தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் சிலாபம் வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த வாகனத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் உட்பட நான்கு பேர் பயணம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version