Home World Australia News கூலிப்படை எழுச்சி புடினுக்கு சறுக்கல் ; அவுஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சர்.

கூலிப்படை எழுச்சி புடினுக்கு சறுக்கல் ; அவுஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சர்.

0

ரஷ்ய அதிபர் புட்டினின் அதிகாரத்தில் வாக்னர் கூலிப்படையினரின் எழுச்சி ஒரு விரிசல் என அவுஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சர் ரிச்சட் மார்லஸ் தெரிவித்துள்ளார்.

அதோடு அதிபர் புடினின் நிழல் இராணுவமான வாக்னர் கூலிப்படையினரின் எழுச்சி புட்டின் அரசாங்கத்தை பலவீனப்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

புட்டின் தற்போதும் ரஸ்யாவை தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்கின்றார் எனினும் இராணுவத்தின் மனஉறுதி சிதைவடைகின்றதாகவும் அவுஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சர்தெரிவித்துள்ளார்.

ரஸ்யா இந்த கலகத்திற்கு பின்னர் பலவீனமாக உள்ளதா என்ற கேள்விக்கு ஆம் என்பதே எனது பதில் என ரிச்சட் மார்லஸ் தெரிவித்துள்ளார்.

ரஸ்யாவில் என்ன நடக்கின்றது என்பதை முழுமையாக தெரிந்துகொள்வது கடினம் என குறிப்பிட்டுள்ள அவர் ,ஆனால் வாரஇறுதியில் குறிப்பிடத்தக்க சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.

சில நாட்களிற்கு முன்னர் இடம்பெற்ற சம்பவங்கள் உக்ரைன் மீதான ரஸ்யாவின் படையெடுப்பு எவ்வளவு ஒழுக்ககேடானது என்பதை வெளிப்படுத்தியுள்ளது எனவும் ரிச்சட்மார்லஸ் தெரிவித்துள்ளார்.

எனினும் இந்த மோதல் முடிவடைவதற்கு பல காலம் எடுக்கும் எனவும் தெரிவித்துள்ள மார்லஸ் புட்டினின் கட்டிடத்தில் ஒரு விரிசல் விழுந்துள்ளது. ஆனால் அது எவ்வளவு பாரதூரமானது முக்கியமானதை என்பதை காலம்தான் சொல்லவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version