Home Srilanka தேங்காய் பறித்துத்தருவதாக சிறுமியை ஏமாற்றி பாலியல் துஸ்பிரயோக முயற்சி – முதியவர் கைது

தேங்காய் பறித்துத்தருவதாக சிறுமியை ஏமாற்றி பாலியல் துஸ்பிரயோக முயற்சி – முதியவர் கைது

0

வீட்டின் வளவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை ஏமாற்றி அழைத்துச் சென்று அங்க சேட்டை செய்த முதியவரை கல்முனை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமைய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர்ப் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (25) மாலை இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.

இதன் போது தனது வீட்டின் வளவில் விளையாடிக்கொண்டிருந்த சுமார் 8 வயதுடைய சிறுமியை அவ்வழியால் மாடு மேய்த்துக் கொண்டிருந்த 64 வயது மதிக்கதக்க முதியவர் தேங்காய் பறித்துத் தருவதாக அழைத்துச் சென்று அச்சிறுமியை பாலியல் துஸ்பிரயோகத்திற்குட்படுத்த முயற்சித்துள்ளதாக சிறுமியின் உறவினரால் முறைப்பாடு வழங்கப்பட்டிருந்தது.

இதற்கமைய சந்தேக நபரான முதியவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இன்று நீதிமன்ற நடவடிக்கைக்காக கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

சம்பவம் தொடர்பில் கல்முனை தலைமையக சிறுவர் பெண்கள் பிரிவு விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version