தன் நடிப்பாலும், திட்டத்தாலும் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படும் பிரபலம்தான் விஜய். லியோ படத்திற்கு பிறகு இவர் கமிட்டாகி உள்ள படங்கள் தற்பொழுது ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது.
லியோ படபிடிப்பில் பிஸியாக இருந்த விஜய், சமீபத்தில் தன் ஆல் இந்தியா தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் மூலம் செய்து வந்த திட்டங்கள் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தன்னை முழுமையாக அரசியலுக்கு தயார் படுத்திக் கொண்டது போல் இருந்தது.
இந்நிலையில் விஜய் அரசியலுக்கு வரப்போகிறார் என்று அறிவிப்பும் வெளிவந்தது. மேலும் அதற்கான வேலைகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்நிலையில், இவர் அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகுவது ஏன் என்று கேள்வியையும் முன்வைத்து வருகிறது.
லியோ படத்திற்கு பிறகு தளபதியின் 68 வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக உள்ள நிலையில், இப்படம் தான் இவருக்கு கடைசி படமாக இருக்கும் அதை தொடர்ந்து இவர் அரசியலில் ஈடுபடுவார் என்பது போல பேச்சு அடிபட்டு வந்தது. ஆனால் நினைப்பது ஒன்று நடப்பது வேறு என்பது போல், நிலைமை மாறி வருகிறது.
அவ்வாறு தளபதி 68க்கு பிறகு அட்லீ இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் உடன் இணையும் படத்தில் விஜய் கமிட்டாகி உள்ளார். மேலும் அதற்கு அடுத்து லலித்துடன் இணைய உள்ளாராம். இப்படி படங்களில் அடுத்தடுத்து கமிட்டாகி கொண்டிருந்தால் எப்படி அரசியலில் ஈடுபடுவார் என்று தெரியவில்லை. இவர் செய்யும் செயல் தற்பொழுது ரஜினி ரசிகர்கள் மாதிரி இவர் ரசிகர்களையும் வேதனைப்படுத்தி வருகிறது.
மேலும் ரஜினி மாதிரி படங்கள் ஓடுவதற்காக அரசியலுக்கு வரப்போவதாக சொல்லி சொல்லி அதிக சம்பளம் வாங்கும் பிளானில் இருப்பாரோ என்ற கேள்வியும் முன் வைக்கிறது. இருப்பினும் இவர் செய்யும் செயல் பணத்தை ஈட்டுவதில் மும்பரமாக இருப்பதாக தெரிய வருகிறது. அதற்கு தன் ரசிகர்களையே பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் என்ற பேச்சும் எழுத தொடங்கி விட்டது.