Home Cinema Celebrity ரஜினிக்கே ரெட் கார்டு கொடுத்த விநியோகஸ்தர்கள் சங்கம்.. 

ரஜினிக்கே ரெட் கார்டு கொடுத்த விநியோகஸ்தர்கள் சங்கம்.. 

0

பொதுவாக சினிமாவில் ஒரு நடிகர் அல்லது நடிகை தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டால் அவர்களை அடுத்தடுத்து படங்களில் நடிக்க விடாமல் ஒட்டுமொத்த தயாரிப்பாளர் சங்கமும் சேர்ந்து எடுக்கும் முடிவு தான் ரெட் கார்டு கொடுப்பது. தளபதி விஜய் முதல் சிம்பு வரை இந்த ரெட் கார்டு பிரச்சனையை சந்தித்திருக்கிறார்கள். ஆனால் இவர்களுக்கு முன்பாகவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு இந்த பிரச்சனை நடந்திருக்கிறது.

1990களின் ஆரம்பத்தில் தயாரிப்பாளர்களின் செலவுகள் அதிகரிக்க நடிகர்களுக்கு சம்பளம் அதிகம் கொடுப்பதுதான் காரணம் என்று சொல்லி அதற்கு உரிய முடிவு எடுத்தே ஆக வேண்டும் என தயாரிப்பாளர்கள் சங்கம், விநியோகஸ்தர்கள் சங்கம் மற்றும் தென்னிந்திய நடிகர்கள் சங்கம் இணைந்து ஒரு ஆலோசனை கூட்டம் நடத்தி இருக்கின்றனர். இதில் நடிகர்களின் சம்பளத்தை குறைப்பதை பற்றி பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது. இந்த மீட்டிங்கில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இருந்திருக்கிறார்.

அப்போது அவர்களது கருத்தில் உடன்பாடு இல்லாத ரஜினிகாந்த், நடிகர்களின் சம்பளம் என்பது அவர்களின் மார்க்கெட் வேல்யூவை வைத்து தான் கொடுக்கப்படுகிறது. இது போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்ள வரி மற்றும் தியேட்டர் வாடகையை குறைப்பது தான் சரியான முடிவு என்று சொல்லிவிட்டு கிளம்பி விட்டாராம். ரஜினியின் இந்த கருத்துக்கு பிறகு அந்தக் கூட்டத்தில் எந்த முடிவுமே எடுக்கப்படாமல் கூட்டமும் கலந்திருக்கிறது. இதனால் தயாரிப்பாளர்களும் ரஜினியின் மேல் கோபப்பட்டு இருக்கிறார்கள்.

விநியோகஸ்தர்கள் சங்கம் இனி ரஜினியின் படத்தை வாங்கக்கூடாது என முடிவெடுத்திருக்கிறார்கள். அந்த நேரத்தில் தான் 1993 ஆம் ஆண்டு விஜயா ப்ரொடக்சன்ஸ் ரஜினியை வைத்து உழைப்பாளி திரைப்படத்தை எடுத்திருக்கிறார்கள். விநியோகஸ்தர்களின் இந்த முடிவுக்கு பிறகு ரஜினி, உலக நாயகன் கமலஹாசனை தனிப்பட்ட முறையில் சந்தித்து பேசி இருக்கிறார். அந்த சந்திப்புக்கு பிறகு படத்தின் அறிவிப்பு வெளியாகி, உழைப்பாளி திரைப்படம் 58 நாட்களில் எடுத்து முடிக்கப்பட்டது.

விநியோகஸ்தர்கள் சங்கம் ரெட் கார்டை விலக்கிக் கொள்ளாததால் ரஜினி இந்த படத்தை நேரடியாக தியேட்டர்களுக்கு கொடுக்க முடிவு செய்தார். மேலும் சவுத் ஆற்காடு, நார்த் ஆற்காடு , செங்கல்பட்டு பகுதியில் ரஜினியே படத்தை விநியோகித்தார். இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது. 150 நாட்களுக்கு மேல் ஓடி வசூல் வேட்டையாடியது. இதனால் விநியோகஸ்தர்கள் கூடி ஒரு முடிவும் எடுத்திருக்கிறார்கள்.

ரஜினியை இப்படியே விட்டால் தியேட்டர் உரிமையாளர்கள் சம்பாதிக்க ஆரம்பித்து விடுவார்கள் என்று உணர்ந்த விநியோகஸ்தர்கள் சங்கம் தாமாக முன்வந்து ரெட் கார்டை விலக்கி இருக்கிறார்கள். இது அந்த சமயத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது. விநியோகஸ்தர்கள் சங்கமே எதிர்த்த ஒரு படம் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்து வசூலிலும் சாதனை புரிந்திருக்கிறது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version